Skip to main content

Posts

நிலவும் என்னவளும்

   தவிக்கின்றாள் நிலவவள்    பொழுதொன்று தவறாமல்    பரிமாணம் பலயெடுத்தும்    தேவதையுன் பேரழகிற்கு    இணையாக இயலாமல்
Recent posts

For My Most Valuable Friend

This poem was written for my friend on his birthday :) பிழைத்துக்கொண்டான் தமிழ்மறை படைத்த தலைவன் !!! நம் நட்பின் கதை காணாமல் -  பைந்தமிழ் சொற்கள் எழுபதைக்கொண்டு நட்பென்னும் அதிகாரம் எழுதி முடித்தான் !!  இல்லையேல் ?? தன் ஆதி முதல் அந்தம் வரை இடைவேளை ஏதுமின்றி, இணை இல்லா தமிழ்க் கொண்டு - நட்பென்னும் அதிகாரம் மட்டுமே படைத்திருப்பான் அப்படைப்பின் ஒவ்வொரு ஈரடியும் நம் நட்பின் ஆழம் தனை உரைத்திருக்கும்..

For My Best Friend

A Poem written for my best friend ever on his Birthday :) கருவின் உருதன்னை தனதென்று ஏற்றிடும் நீரின் இணை நீ உணர்ச்சிகள் எனதினும் நட்பெனும் உறவினால் உனதெனப் பகிர்வதால் !!! மழையென வருகிறாய் என் மனம் மகிழ்ந்திட பேரலையென எழுகிறாய் என் கோபம் மறைத்திட என் நட்பொரு காவியமெனில் நாயகன் நீ இன்றி வேறெவரோ??

Love you the Most

A very special poem written for anniversary as a gift :) வருடங்கள் பின்னோட  இந்நாளில் அவள் எனதாய் என் உலகில் ஓர் உயிராய் புதியதொரு நல் உறவாய் !! அன்பென்னும் மழையதனை அளவின்றி பொழிந்திடும் வான் விரிந்த கார்முகிலாய் !! பெற்றவர்கள் உறவிடுத்து உற்றவன் என் கரம் பிடித்து என்னவளாய் வந்தவளே உன் உயிரென நான் இருப்பேன் நம் இருவர் உறவுகண்டு மற்றவர்கள் கண்படவே !!!

Anniversary Gift

A poem written to show our love with mom and dad on their anniversary occasion :) உம் இருவர் மனம் ஒன்றாய் ஆண்டொன்று கடந்திடவே இறைவனவன் பரிசளித்த ஆண்டொன்றின் தொடக்கமிது  உங்களது உலகமதில் எப்பொழுதும் ஓர் உயிராய்  நான் வசிக்க விரும்புகின்றேன் மனம் நிறைய அன்புடனே சேய் என்னை வாழ்த்திடுங்கள் This was written for one of my friends by me

Cafe Coffee Day

An instant haiku on a very special occasion @cafe coffee day தேநீரும் தேனென இனித்தது இனியவள் உன்னுடன் பகிர்ந்து பருகையில்