A very special poem written for anniversary as a gift :) வருடங்கள் பின்னோட இந்நாளில் அவள் எனதாய் என் உலகில் ஓர் உயிராய் புதியதொரு நல் உறவாய் !! அன்பென்னும் மழையதனை அளவின்றி பொழிந்திடும் வான் விரிந்த கார்முகிலாய் !! பெற்றவர்கள் உறவிடுத்து உற்றவன் என் கரம் பிடித்து என்னவளாய் வந்தவளே உன் உயிரென நான் இருப்பேன் நம் இருவர் உறவுகண்டு மற்றவர்கள் கண்படவே !!!
A Poem written for my best friend ever on his Birthday :) கருவின் உருதன்னை தனதென்று ஏற்றிடும் நீரின் இணை நீ உணர்ச்சிகள் எனதினும் நட்பெனும் உறவினால் உனதெனப் பகிர்வதால் !!! மழையென வருகிறாய் என் மனம் மகிழ்ந்திட பேரலையென எழுகிறாய் என் கோபம் மறைத்திட என் நட்பொரு காவியமெனில் நாயகன் நீ இன்றி வேறெவரோ??
Comments
Post a Comment